Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டில்லியில் இன்று சோனியா தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, விலகியபிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். 

டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கூட்டணியில் இருந்து விலகியது. 

டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுகவும் போராட்டம் நடத்தியது. எனவே கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளிடம் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. 

மகாராஷ்ட்டிராவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டணியில் ஏற்பட்டுள்ள உரசல் பற்றியும் இன்றையை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post