Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆய்வு கூட்டம்

பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொழிலாளர் நலத்துறை செயலாளர் மோகன் பியாரோ, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா , பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் பட்டாசு ஆலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி அமைச்சர் செல்லப்பாண்டியன் விளக்கிக் கூறினார். 

பட்டாசு ஆலைகளை உரிமம் பெற்றவர்களே நடத்து வேண்டும் என்றும், வேறு நபருக்கு குத்தகைக்கு விட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் செல்லப்பாண்டியன் எச்சரித்தார். 

இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வம் 689 பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக குழுவினர் இன்று 6வது நாளாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் கடந் த5ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post