Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையில் மாற்றுவழி மின்சாரம் பற்றிய கண்காட்சி: பார்வையாளர்கள் வரவேற்பு

மின்வெட்டு பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக மாற்று வழி மின்சாரத்தின் பயன்பாடு பற்றிய கண்காட்சி மதுரையில் நடைபெற்று வருகிறது. அதில் சூரிய ஒளி மின் சக்தியின் பயன்பாடு குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.


மதுரை மாவட்ட சிறு – குறுந்தொழில் சங்கம் சார்பில் தொழில் வர்த்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


அதில் சூரிய மின் சக்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மின்பற்றாக்குறை நிலவுதால், சூரிய மின் சக்தி முறையை பயன்படுத்தி பயன்பெறலாம் என்கின்றனர் கண்காட்சி அமைப்பாளர்கள்.

மின்வெட்டில் இருந்து தப்பிக்க சூரிய ஒளி மின் சக்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்காட்சியை காண வந்தவர்கள் கூறினர்.
[vuukle-powerbar-top]

Recent Post