Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்காவில் கலப்பு இனத்தவர் அதிகரிப்பு

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், அந்த நாட்டில் கலப்பு இனத்தவரின் எண்ணிக்கை, கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதில், 90 லட்சம் பேர் தாங்கள் பல்வேறு இனங்களின் கலவை என்று குறிப்பிட்டுள்ளனர். 

இது 2000ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்ததை விட 32 சதவீதம் அதிகமாகும். இவர்களில் மிக அதிகமாக, 

கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவரின் கலவையாக 18 லட்சம் பேரும், 

வெள்ளை மற்றும் இதர இனங்களின் கலவையாக 17 லட்சம் பேரும், வெள்ளை மற்றும் ஆசிய நாட்டவர் கலவையாக 16 லட்சம் பேரும், 

வெள்ளை, அமெரிக்க இந்தியர் மற்றும் அலாஸ்கா பூர்வீகத்தின் கலவையாக 14 லட்சம் பேரும் இடம்பெற்றுள்ளனர். 

அதிலும் குறிப்பாக, கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் இதுபோன்ற கலப்பு இனத்தவர்கள் தலா ஐந்து லட்சம் பேராவது உள்ளனர். 

 கடந்த 2000ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தான், ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களின் கலவை பற்றி குறிப்பிடுவதற்கு முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 30 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரத்து 538 பேர் உள்ளனர். இது, 2000ம் ஆண்டின் மக்கள் தொகையை விட 9.7 சதவீதம் அதிகமாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post