Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலைகளுக்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு

ஜப்பானில் 2040-ம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நோடா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், 40 ஆண்டுகளைக் கடந்த அணுஉலைகளை உடனடியாக மூடவும் ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, பல அணுஉலைகள் தற்காலிகமாகமூடப்பட்டுள்ளன. 

ஃபுகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானில் அணுஉலைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தலைநகர் டோக்யோ உட்பட பல்வேறு நகரங்களில் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, அணுஉலைகளை நிர்வகித்து வரும் ஜப்பான் அரசின் டோக்யோ எலக்ட்ரிக் நிறுவனம், வீடுகளுக்கான மின் கட்டணத்தை 8 சதவிகிதமும், தொழில் நிறுவனங்களுக்கான கட்டணத்தில் 15 சதவிகிதத்தையும் உயர்த்தியுள்ளது. 

ஏற்கனவே, 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து உலைகளையும் மூடப் போவதாக ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post