Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரு சிறுவர்கள் யாழில் காணாமல் போயுள்ளார்கள்!


யாழ்.குடாநாட்டில்இரு சிறுவர்களைக் காணவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேற்படி முறைபாடுகள் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவது.
மீசாலை, அல்லாறையை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 4 ஆம்திகதியில் இருந்து காணமல் போயுள்ளார். இவர் சம்பவ தினத்தில் மீசாலையில் இருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்றார் என்றும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் இதுவரை அவருடைய எந்தவிதமானதொடர்பும் கிடைக்கவில்லை என்றும் அவருடை தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று தெல்லிப்பளை பன்னாலையைச் சேர்ந்த சிறுவன் கடந்த 28 ஆம் திகதி; வீட்டின் சகோதரனுடன் சண்டை பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இதுவரை அவருடைய தொடர்பு எதுவும்கிடைக்கவில்லை என்று குறித்த சிறுவனின் மூத்த சகோதரியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்து.

[vuukle-powerbar-top]

Recent Post