Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய மத்திய விஞ்ஞானிகள் வருகை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய மத்திய விஞ்ஞானிகள் குழு வர உள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அவர் நேற்று வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகாசியில் உள்ள பட்டாசி தொழிற்சாலைகளை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார். 

இந்த விஞ்ஞானிகள் குழு, தொழிற்சாலைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்றார்.

இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் ஆலை உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் நாராயணசாமி கேட்டுக் ககொண்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post