Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆதார் அடையாள அட்டை திட்டம் குறித்த விழிப்புணர்வு இப்போது யூ ட்யூபில்

குடிமக்களுக்கான ஆதார் அடையாள அட்டை திட்டம் குறித்த விழிப்புணர்வு இப்போது யூ ட்யூப் தளம் மூலமும் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. யூ ட்யூப் மூலம் ஆதார் அடையாள அட்டை தகவல்களை தரும் நடைமுறையை தேசிய அடையாள அட்டை ஆணையம் தொடங்கியுள்ளது. 

யூ ட்யூபில் இதற்கென உள்ள பிரிவில் ஆதார் திட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்வது எப்படி, இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன என்பனவற்றை விளக்கும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன என தேசிய அடையாள அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார். 

இத்தளத்தில் உள்ள தகவல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும் இந்த ஆணையம் கூறியுள்ளது. அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவையை கொண்டு சென்று சேர்க்கும் அரசின் முயற்சிக்கு ஆதார் அடையாள அட்டை திட்டம் மிகவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதார் திட்டத்தில் மக்களின் பெயர் சேர்க்கும் திட்டத்தின் 2வது கட்டம் நாட்டின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. மேலும் ஆதார் எண் அடிப்படையில் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை கொண்டுசென்று சேர்க்கும் சோதனை முயற்சி 50 மாவட்டங்களில் நடந்து வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post