Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்கிரஸ் உயர்மட்ட குழு நாளை கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், மத்திய அமைச்சரவை மாற்றம் பற்றியும் ஆலோசிக்கவுள்ளனர். 

கபில் சிபல், வீரப்ப மொய்லி, வயலார் ரவி , பேனி பிரசாத் வர்மா ஆகிய அமைச்சர்கள் இரண்டு துறைகளை கவனித்து வருவதால், அவர்களிடம் இருந்து ஒரு துறையை வேறு யாருக்காவது கொடுப்பது பற்றி உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மட்டத்தில் மாற்றம் செய்வது பற்றியும் பேசவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய ராகுல் காந்திக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை, சில மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர். 

சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரும், ரயில்வே துறையை கூடுதலாக கவனித்து வருபவருமான ஜோஷி, சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இதேபோல், மகாராஷ்ட்டிர முதலமைச்சர் பிரித்விராஜ் சவானும், சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post