இயக்குனர் சற்குணம் இயக்கத்தில்,நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படம் "சொட்ட வாழைக்குட்டி".முழுவதுமாக கும்பகோணத்தில் படமாக்கப்படவுள்ள இப்படத்தில்,குத்துவிளக்கு வியாபாரியாக வேடம் ஏற்கவுள்ளார் நடிகர் தனுஷ்.
மேற்படி படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிகை ஹன்ஷிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த "மாப்பிள்ளை" படமானது குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் தனுஷ் "ராஞ்ச்னா " என்ற இந்திப் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்ததும்,"சொட்ட வாழைக்குட்டி " படத்திற்கான படப்பிடிப்புக்கள் வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியில் மிக மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் கிப்ரான்,அறிவுமதி,நா.முத்துகுமார் மற்றும் தேவேந்திரன் ஆகியோரின் வரிகளுக்கு மேட்டு சேர்த்துள்ளார். அண்மையில் கிப்ரான் இசையமைப்பில் வெளிவந்த "வாகை சூடவா" படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக பெரியளவில் வெற்றிபெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகை ஹன்ஷிகா, "வாலு" மற்றும் "வேட்டை மன்னன்" போன்ற படங்களில் நடிகர் சிம்புவுடன் நடித்துக்கொண்டுள்ளார்.