Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"ஒரு பாட்டிற்கு நடனம் ஆடுகிறேனா?" கொந்தளிக்கும் சுருதி ஹாசன்.


ராம் சரண் தேஜா நடிக்கும் புதிய படமொன்றில் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடுகிறார் நடிகை சுருதி ஹாசன் என்ற செய்தியை மிக வன்மையாக நிராகரித்துள்ளார் நடிகை சுருதி ஹாசன்.

நடிகர் ராம் சரண் தேஜா நாயகனாகவும் நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் அமலா பால் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கும் படம் "நாயக்".இப்படத்திலேயே நடிகை சுருதி ஹாசன் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடுகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் பிரபு தேவா இயக்கும் இந்திப் படமொன்றில் நாயகியாக நடித்துக் கொண்டுள்ளார் நடிகை சுருதி ஹாசன்.தமிழில் வெளியான "உனக்கும் எனக்கும்", என்ற படத்தின் இந்தி மொழியாக்கப் படத்திலேயே அவர் நடித்துகொண்டுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இப்படத்தில் க்ரிஷ் குமார்,ரந்திர் கபூர்,சோனு சூட் மற்றும் வினோத் கண்ணா ஆகியோர் நடித்துக்கொண்டுள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post