Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வடக்கில் பல கிராமங்களை வரைபடத்தில் இருந்து அழித்துள்ள சிங்கள அரசு

நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டுவரும் சிங்களம் வடக்கின் வரைபடத்தில் இருந்து பல கிராமங்களை அழித்துள்ளது என்பது வெளிப்படையான உண்மை இந்த அரசு வடக்கின் வசந்தம் என்ற பெயரில் செய்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றா இந்த நில பறிப்புக்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன்
காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மருதநகர், கிருஸ்ணபுரம், இரணைத்தீவு ஆகிய கிராமங்கள் திட்டமிட்ட முறையில் வடக்கு மாகாண வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது கேப்பாபிலவு கிராமம் கூட  வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு தமிழ்க் கிராமங்கள் அகற்றப்படுகின்றதென்றால் தமிழர்களின் இருப்பு, வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியனவும்  அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றதென்பதே  பொருள்.
சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது. அந்த வகையில் எமது சுவர் எமது மண். எனவே மண்ணிருந்தால்தான் நாம் ஒரே இனமாக வாழமுடியும். நாம் ஒரே இனமாக வாழக்கூடாது, வாழமுடியாதென்ற அகங்காரம் காரணமாகத்தான் மஹிந்த அரசு தமிழர்களை அவர்களது கிராமத்துக்குச் செல்லமுடியாது தடுத்துக்கொண்டிருக்கின்றது.
யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளாகின்றன என அரசு தெரிவிக்கின்றது. அதுவும் அண்மையில் கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். தெற்கிலுள்ள மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிப்பதாக. ஆனால் தெற்கிலுள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் பெற்றுள்ள சுதந்திரம் வடக்கிலுள்ள மக்கள் அனுபவிக்கவில்லையென்பதை கண்கூடாகக் காணமுடிகின்றது.
தமிழர்கள் சொந்த மண்ணுக்கு செல்லமுடியவில்லை. சொந்த மண்ணில் விவசாயம் செய்யமுடியவில்லை இவை சுதந்திரமுமில்லை, உரிமையுமில்லை. தெற்கு மக்களுக்குள்ள அனைத்துச் சுதந்திரமும் வடக்கில் அழிக்கப்படுகின்றது. இதற்காகதான் நாம் ஜனநாயக ரீதியாக  போராடுகின்றோம். தமிழர்களை பொறுத்தவரை, எமக்குள்ள ஒரே வழி ஜனநாயக ரீதியாக எமது உரிமைக்குரலை ஒலிக்கச்செய்வதேஎன்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post