Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அலட்சியத்தால் திருச்சியில் பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி

திருச்சியில் பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்து கிஷோர் என்ற 5 வயது மாணவன் பலியானான். பலியான சிறுவன் திருச்சி துறையூரில் இருக்கும் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தார்.

விபத்து நடந்தது எப்படி? 

மாணவன் கிஷோர், இன்று காலையில் வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் ஏறியிருக்கிறான். கிளீனர் அமரும் இடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார் மாணவன் கிஷோர், அருகே இருந்த கதவு சரியாக மூடப்படாமல் திறந்ததை அடுத்து மாணவன் கிஷோர் தவறி விழுந்தான். 

ஓடும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் மாணவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை, மற்றும் பள்ளியை சுற்றி பெற்றோர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தாம்பரத்தில் ஸ்ருதி ! 

கடந்த ஜூலை 25ம் தேதியன்று தாம்பரத்தில் உள்ள சீயோன் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்துக்குள் இருக்கைக்கு அடியில் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். 

இந்த சம்பவத்திற்குப் பின்னர் தமிழக அரசு பள்ளி பேருந்துகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை கோர்ட்டில் சமர்ப்பித்தது. அதிக கெடுபிடிகள் கொண்ட புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையிலும் மீண்டும் விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விளக்கம் : 

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் அளித்துள்ள முதல் கட்ட விளக்கத்தில், வாகனத்தில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மீறப்பட்டதா அரசு உத்தரவு ? 

கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்தும் இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமா? இல்லை பள்ளி நிர்வாகத்தின் மெத்தனமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post