
ராஜபக்ச வருகையை ஒட்டி தீக்குளித்து உயிர் நீத்தார் சேலம் ஆட்டோ ஓட்டுனர் விஜயராஜ். அவரின் பிறந்தநாள் செப் 24. இதை எழுச்சி நாளாக இனி வருடா வருடம் கொண்டாடி அவரின் லட்சியங்களை நிறைவேற்ற போராட வேண்டும் என முடிவெடுத்தனர் அவரின் நண்பர்கள்.
மேலும், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து அவரை சொந்தம் கொண்டாட இதற்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தவர்கள், விஜயராஜின் பிறந்தநாளான இன்று ‘விஜயராஜ் எழுச்சி இயக்கம்’ என உருவாக்கிவிட்டனர்.
இதிலிருந்து விஜயராஜ் கடிதத்தில் எழுதிய தமிழீழ கனவை நிறைவேற்றுவோம் என அப்பகுதி மக்களும் நண்பர்களும் சூளுரைத்தனர். தமிழீழ கனவை நோக்கமாக கொண்ட யாரும் இதில் இணையலாம் என்றனர்.
அவர் வசித்த சின்ன சிறிய வீடு இருந்த சின்ன தெருவில் விழாவாக எடுத்து மாலை கொண்டாட இதில் பல்வேறு தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.