Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 6 பேர் பலியாகினர்.

சிரியாவில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் எப்போதும் தாக்குதல் அச்சத்திலேயே வாழ்ந்துவருகின்றனர்.

முதல் குண்டு வெடிப்பானது ரூகேன் அடின் எனும் இடத்தில் மசூதி ஒன்றின் அருகே நிகழ்ந்தது. இதில் பலியான 6 பேரில் 5 பேர் பாதுகாப்புப் படைகளை சேர்ந்தவர்கள்.

இதன் தொடர்ச்சியாக செய்தித்துறை அமைச்சக அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கார்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post