Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இயக்குனர் சக்திவேல் இயக்கும் "ஈகோ".


நடிகர் நகுலை வைத்து "கந்தகோட்டை" என்ற படத்தை இயக்கிய, இயக்குனர் எஸ்.சக்திவேல் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்."ஈகோ" என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் புதுமுக நாயகன் வேலு நடிக்கவுள்ளார்.

அமெரிக்காவில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கும் வேலு, தமிழ் சினிமாவில் ஓரிடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அனஸ்வரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில், "கனா காணும் காலங்கள்" புகழ் பாலா நகைச்சுவை வேடம் ஏற்கவுள்ளார்.ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு,  இசையமைக்கிறார் காஷ் வில்லன்ஸ்.

இப்படத்தை பற்றி நம்மிடம் கருத்து தெரிவித்த, படத்தின் இயக்குனர் சக்திவேல்,நாயகன் மற்றும் நாயகிக்கிடையே உண்டாகும் நட்பு, காதல்,வெறுப்பு,இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லும் அழகிய பொய்கள் ஆகியவற்றை மிக அழுத்தமான காதல் கதையாக இப்படத்தின் மூலமாக மக்களுக்கு சொல்ல இருப்பதாகவும்,இப்படமானது அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்த கூடிய வகையில் அமையும் எனவும் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post