Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊடகங்களில் செய்தி வெளியீடு தொடர்பாக நெறிமுறைகளை வகுக்க முடியாது ~ உச்சநீதிமன்றம்

ஊடகங்களில் செய்தி வெளியீடு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர், ஒரு செய்தி குறித்த வெளியீட்டை ஒத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ஊடகங்களுக்கான நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. 

செய்தியாளர்கள், தங்களுடைய வரம்புகளை அறிந்து, எல்லைகளைக் கடக்காமல் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசியல் சாசனத்தின் கீழ் வரும் பேச்சுரிமையும், கருத்து சுதந்திரமும், செய்தியாளர்களுக்கான தனித்த உரிமை இல்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். 

செய்தி வெளியீட்டை ஒத்தி வைக்கக் கோருவது என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தடை கோருவதாக, தண்டனைக்குரியதாக இருக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி செய்தி வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், சமுதாய அக்கறையுடன் கூடியது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post