Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோரிக்கை நிறைவேறும் வரை நகரமாட்டோம் ~ போராட்ட குழுவினர்

தற்போது அணு உலை போராளிகள் அணுஉலைக்கு 3/4KM தொலைவில் இருப்பதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.

அத்துடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ், மற்றும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போராட்டக்காரர்கள் கூறினார்கள் "இந்த அரசு மக்களுக்காக இருக்கிறதா ? இல்லை அரசுக்காக மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை முன்வைத்தார்கள். அத்துடன் எங்களின் போராட்டத்திற்கு முதல்வரே ஆதரவு தந்தார். ஆனால் தற்போது அவரை சில அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் மற்றும் தங்களின் போராட்டத்தை தவறாக திசைதிருப்ப பார்க்கிறார்கள் நாங்கள் எப்போதும் வன்முறையை கையில் எடுப்பதில்லை முடிந்தவரை அகிம்சைமுறையில்தான் போராடுகின்றோம். இனிமேலும் அப்படிதான். 144 தடை உத்தரவு என்பது கூடங்குளம் அணுஉலைஇருக்கும் பகுதிக்கு போட்டிருக்கலாம் ஏன் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போடப்பட்டிருக்கிறது" என்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.

இவ்வாறு அவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த போராட்டத்தில் ஒருங்கினைப்பாளர்களின் ஒருவரான மை.பா.தேசராஜன் அவரிடம் தொடர்புகொண்டு போராட்டம் பற்றி கேட்டபோது,

"எங்களுக்கு இந்த நீதிமன்றமும் நீதி தர மறுத்துவிட்டது. அதனால் மக்களின் நீதியினை நாங்களே முன்னின்று எடுக்கணும் என்பதற்காக இந்த அறப்போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். நாங்கள் இப்போது அணுஉலைக்கு அருகில் இருக்கிறோம் இந்த அணுஉலையில் எரிபொருள் நிரப்பக்கூடாது என்பதே எங்களின் தற்போதைய கோரிக்கை, எரிபொருள் நிரப்பமாட்டோம் என்று அரசு எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தால் நாங்கள் இந்த போரட்டத்தை கைவிட்டு நாங்கள் சென்று விடுவோம். நாங்கள் எந்த வன்முறைக்கும் ஆயத்தமாக இல்லை, அரசின் முடிவு வரும் வரைக்கும் இந்த இடத்தில எத்தினை நாளாகினாலும் நாங்கள் இருப்போம் இதுதான் எங்களின் கோரிக்கை"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க காவல்துறையினர் போராட்ட குழுவினருடன் சமாதான பேச்சுக்கு முனைவதாகவும் உங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம் என்று கூறிய வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் தமிழக முதல்வர் மக்களை எந்த சந்தர்ப்பத்திலும் துன்புறுத்தக்கூடாது என உத்தரவு பிரப்பித்திருப்பதால் காவல்துறை அமைதிகாத்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் தகவலுக்கு அலைசெய்திகளுடன் இணைந்திருங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post