Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சிங்கள வீரர்கள் நீக்கம்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட இரு சிங்கள வீரர்களை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம்.

வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஷிப் லீக் 20 ஓவர் உள்ளூர் விளையாட்டு போட்டியில் பங்குபெறுவதற்கான வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இரு சிங்கள வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.நுவன் குலசேகரா மற்றும் ரந்திவ் ஆகிய இரு சிங்கள வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு வரும் சிங்களவர்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதே இதற்க்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பில் இருந்து தப்பியுள்ளது எனலாம்.
[vuukle-powerbar-top]

Recent Post