Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் காங்கிரஸ் தலைகள்

கூடங்குளம் மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூறுகையில்,

"கூடங்குளம் மக்களும் இடிந்தகரை மக்களும் நடத்துகிற போராட்டம் அல்ல, அவர்களை தவறான பாதைக்கு இழுத்துச்செல்லுகின்ற சில பேர் அவர்களுக்கு பின்னால் இருந்து இயக்குகின்ற பல பேர் இது ஒரு கூட்டு முயற்சியாகத்தான் இது நடந்துகொண்டிருக்கிறது இது என்னுடைய கருத்து." என அவர் கூறினார்.

தமிழக காநிராஸ் முன்னால் தலைவர் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் கூறுகையில், 

"நாட்டு விரோத சக்திகலேல்லாம் ஒன்று சேர்ந்து நாட்டிலே குழப்பம் விளைவிக்க எத்தேனித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை ஜெயாலிதா அவர்கள் உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், தமிழகத்திலே இருக்கக்கூடிய மின்வெட்டை போக்குவதற்கு கூடங்குளம் மின்சாரம் மிகவும் அவசியம்." என அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post