Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போராட்டக்காரர்களை கண்ணியமாக நடத்திய மத்திய பிரதேச காவல்துறை.


போராட்டக்காரர்களை கண்ணியமாக நடத்திய மத்திய பிரதேச காவல்துறை.

ராஜபக்சேவின் வருகையை கண்டிக்க மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் , இயக்கங்களும் மத்திய பிரதேசத்திற்கு சென்றதை நாம் அறிவோம். மதிமுகவை மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தி மூன்றாம் நாளில் கைது செய்தது காவல் துறை. மற்ற போராட்டக் காரர்கள் தொடர்வண்டி வழியே போபால் சென்றடைந்தனர். தொடர்வண்டி நிலையத்தில் வைத்து அனைவரையும் கைது செய்தது காவல்துறை .

 தமிழ் மக்களிடம் தொடர்பு கொள்வதற்கு மொழிப் பிரச்சனை வேறு இருந்தது அவர்களுக்கு . இருந்தும் , ஒரு தார்மீகமான போராட்டத்திற்கு மத்திய பிரதேச காவல் துறை மதிப்பளிக்க தவறவில்லை . போராளிகள் அனைவரையும் மிகவும் கண்ணியமாகவும் , கவனமாகவும் நடத்தியுள்ளது காவல் துறை . திரு வைகோ அவர்களை கைது செய்து விடுவிக்கும் போது அவருக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி உள்ளது காவல்துறை .

 மற்ற போராளிகளையும் விடுதலை செய்த போது அவர்களை தொடர்வண்டி நிலையம் வரை சென்று ஏற்றிவிட்டு, மாநில எல்லை வரை அவர்களுக்கு எந்த பிரச்சனை வரக் கூடாது என்று காவல்துறை அதிகாரியின் அலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர். ஏதாவது  பிரச்சனை என்றாலோ உதவி வேண்டும் என்றாலோ தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. மத்திய  பிரதேச காவல் துறைக்கு தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  

 இவர்களை பார்த்து தமிழக காவல் துறை பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.




[vuukle-powerbar-top]

Recent Post