Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிரிய நெருக்கடிக்கு இராணுவ தீர்வு பதிலாக அமையாது - பான் கீ மூன்

சிரிய நெருக்கடிக்கு இராணுவ தீர்வு பதிலாக அமையாது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 

படை பலத்தின் மூலம் தோற்கடிப்பதற்கு சிரிய அரசாங்கமும், அந்த நாட்டு கிளர்ச்சியாளர்களும் முயற்சிப்பதாக பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் முடிவு எட்டப்படாது என தெரிவித்த ஐ.நா செயலாளர் நாயகம் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பினை விடுத்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. 

தலைநகர் டமஸ்கஸ் மற்றும் வட பிராந்தியத்திலுள்ள அலேப்போ ஆகிய பகுதிகளில் கடும் மோதல்கள் தொடரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

சிரிய நெருக்கடி தொடர்பான நிழற்படங்கள் தம்மை கடுமையாக பாதித்ததாக ஐ.நா பொதுச் சபையின் புதிய கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்
[vuukle-powerbar-top]

Recent Post