Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தன் வயதில் பாதியளவு வயது வித்தியாசமுள்ள நாயகியுடன் ஜோடி சேரவுள்ள ஜீவா.


இயக்குனர் ரவி.கே.சந்திரன் இயக்கப்போகும் "யான்" படத்தில், ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.ஆயினும் தற்போது ஒரு புதிய செய்தியாக,ஜீவாவின் ஜோடியாக நடிகை கார்த்திகாவின் தங்கை துளசி நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

14 வயதை  மட்டுமே பூர்த்தி செய்துள்ள துளசி, தற்போது கார்த்திக் மகன் கெளதம் நடிக்கும் "கடல்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ரவி.கே.சந்திரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்களில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்கிடையே, தன்னுடைய 28 ஆவது வயதை பூர்த்தி செய்திருக்கும் ஜீவாவோடு, "யான்" படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள துளசி வெறும் 14 வயதே பூர்த்தியானவர்.இவர்கள் இருவரது ஜோடி பொருத்தம் எவ்வாறு அமையப்போகிறது என்ற கவலையில் சிக்கித்தவிக்கிறார் துளசியின் அம்மாவும், முன்னாள் நடிகையுமான ராதா.

[vuukle-powerbar-top]

Recent Post