Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியின் வருகையை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு

குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியின் வருகையை கண்டித்து காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள், முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. 

3 நாள் பயணமாக பிரணப் முகர்ஜி, ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில், கடையடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. பிரிவினைவாதிகள் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 

65 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post