Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மன்மோகன்சிங் இல்லத்தில் இன்றிரவு முக்கிய சந்திப்பு புதுடெல்லி சென்றார் மகிந்த

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றுமாலை புதுடெல்லியை சென்றடைந்தார்.

சிறப்பு விமானம் மூலம் புதுடெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த இலங்கை அதிபரை, இந்திய மத்திய இணையமைச்சர் அஸ்வினிகுமார், இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் மற்றும் புதுடெல்லிக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் வரவேற்றனர்.

இன்றுமாலை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ள மகிந்த ராஜபக்ச, அதன்பின்னர் இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களில் இருதரப்பிலும் உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்பர் என்று தெரிகிறது.

நாளை காலை மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்குச் செல்லும் மகிந்த ராஜபக்ச, அங்கிருந்து சாஞ்சிக்குச் செல்வார்.

அங்கு நாளை நண்பகல் நடைபெறும் பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பார்.

அத்துடன், சாஞ்சியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் ஒன்றிலும் இலங்கை அதிபர் உரையாற்றவுள்ளார்.

நாளை மதியம், மகிந்த ராஜபக்சவைக் கௌரவித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான் விருந்தளிக்கவுள்ளார்.

இதையடுத்து நாளை பிற்பகல் புதுடெல்லி திரும்பும் மகிந்த ராஜபக்ச சனிக்கிழமை கொழும்புக்குப் புறப்படுவார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் பௌத்த பிக்குகளும் இந்தியா சென்றுள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post