Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருச்சியில் அனுமதி இல்லாமல் இயங்கிய பட்டாசு தொழிற்சாலைக்கு முத்திரை

திருச்சி உறையூர் பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கிய பட்டாசு தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அந்த தொழிற்சாலையில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்ப நகர் பகுதியில் செயல்பட்ட அந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர்கள் ராஜேந்திரன், சர்புதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பட்டாசு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட அனுமதி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, திருச்சி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் குடோன்களில் சோதனை செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி சிவகாசி முதலிப்பட்டி பகுதியில் உள்ள ஒம்சக்தி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில், 39 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post