Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான வழக்கை 27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

கூடங்குளம் அணு உலையில், எரிபொருள் நிரப்ப அனுமதிக்கக் கூடாது என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பொறியாளர் சுந்தர்ராஜன் தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த 17 பரிந்துரைகளில், ஆறு மட்டுமே கூடங்குளத்தில் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், எரிபொருள் நிரப்ப அளிக்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. 

பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன்னுடைய வாதங்களை எடுத்துக் கூறினார். 

அவர் தரப்பு வாதங்களை முழுமையாக முடித்தவிட்டதால் இந்த வழக்கை 27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post