Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. உள்ளூர் வர்த்தக சமூகத்தின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அரசு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வர்த்தகப் பொருளாதார இரு தரப்பு உடன்படிக்கையான "சீபா' நிச்சயமாகக் கைச்சாத்திடப்படும். எனினும் அவசர அவசரமாக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் திட்டம் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.


ஒப்பந்தம் தொடர்பில் சில உள்ளூர் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

எதேச்சதிகாரமான தீர்மானங்களை எடுக்க முடியாது. பல்வேறு தரப்பினருடனும் பேச்சு நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீபா உடன்படிக்கையின் நன்மை, தீமைகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான அனைத்து விடயங்களையும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post