Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விவேக்குடன் அமெரிக்காவில் இருக்கும் ஸ்ரேயா.


சின்ன கலைவாணர் விவேக் மற்றும் ஸ்ரேயா ஷரன் நடிக்கும் "சந்திரா" படத்தின் சில முக்கிய காட்சிகளின்  படப்பிடிப்பு அண்மையில் அமெரிக்க பொருளாதார நகரமான நியு  யோர்க்கில் நடைபெற்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த, சின்ன கலைவாணர்,நியூ யார்க் நகரின் சில வீதிகளில் எங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது, மிக சுவாரஷ்யமாக அமைந்த அந்த படப்பிடிப்பிற்கு அமெரிக்க வாழ் மக்கள் மிக சிறந்த ஒத்துழைப்பை நல்கியதாக தெரிவித்தார்.

அமெரிக்க  மக்களை பொறுத்தவரை, அங்கே  செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தக்க மரியாதை கொடுத்து மிக அன்பாக உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என தெரிவித்த அவர்,படப்பிடிப்பின் இடைவெளி நேரத்தில் ஸ்ரேயாவுடன் சேர்ந்து அங்குள்ள வணிக வளாகத்திற்கு சென்று சில பொருட்களை வாங்கியதாகவும்,ஸ்ரேயா தனது மிக சிறந்த தோழி என்றும்,"எனக்கு 20 உனக்கு 18 " படம் நடித்த போதிலிருந்தே அவர் தனக்கு பரிச்சயமானவர் எனவும் கூறினார்.

"சந்திரா" படத்தை பற்றி  விவேக் கூறுகையில்,இப்படமானது ஒரு அரச வம்சத்தை பற்றியதாகவும், இதில் ஸ்ரேயா இளவரசியாகவும், தான் இளவரசியின் அண்ணனாக, அதாவது இளவரசராக நடிப்பதாகவும் கூறினார்.





[vuukle-powerbar-top]

Recent Post