Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளத்தில் தொடரும் பதற்றம் ~ மக்களின் நிலை என்ன?

தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் மிகவும் பதற்றத்துடன் கூறுகிறார். நிலைமை மிகவும் மோசமாக காணப்படுவதாகவும், மக்கள் சிகிச்சைக்கு மருத்துவ மனைக்கு செல்ல அனுமதியில்லாமலும் தவிப்பதாக கூறப்படுகிறது.

மற்றும் கூடங்குள காவல்நிலையத்தினை மக்கள் முற்றுகையிட்டு அடித்ததாகவும் அதைத்தொடர்ந்து காவல்துறைக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

தற்போது இடிந்தகரையில் இருக்கும் தேவாலயத்திற்கு ஒன்று கூடுவதற்க்காக மக்கள் அங்கே சென்றுகொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொளுத்தும் வெயில் என்று பாராமல் குழந்தைகள் பெண்கள் மதிய உணவு கூட உண்ணாமல் தேவாலயம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருக்கும் மக்களின் வேண்டுகோள் எங்களை காப்பாற்றுங்கள், நாங்கள் இறந்ததுக்கு பிறகு வரவேண்டாம் எங்களுக்கு ஓர் தீர்க்கமாக முடிவு தாருங்கள் என்று வேண்டுகின்றனர் தமிழக அரசை.

இனியும் மெளனமாக இருந்தால் தமிழக அரசு பெரும் அவப்பெயரை பெற்றுக்கொள்வது நிச்சயம்.

மேலும் உடனடி தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்
[vuukle-powerbar-top]

Recent Post