Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜ்மல் கசாபிற்கு கிடைத்த மரண தண்டனை உதயகுமாருக்கும் கிடைக்கக் கூடும்




நம்பினால் நம்புங்கள் , மும்பையில்  துப்பாக்கி  சூடு நடத்தி பல பேர்களை கொன்ற தீவிரவாதி அஜ்மல் கசாபிற்கு  என்ன தண்டனை கிடைத்ததோ அதே தண்டனை அணு உலைகளில் இருந்து பல தலைமுறை மக்களின் உயிர் காக்க போராடிவரும் உதயகுமாருக்கும் இன்னபிற போராளிகளுக்கும் கிடக்க வாய்ப்புள்ளது . அது தான் இந்திய ஜனநாயகம்.    

தேசத்தின் மீது போர் தொடுத்ததாக (குற்றப் பிரிவு 121ன் படி) ஒரே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட முகமது அஜ்மல் அமீர் கசாப் மீதான மரண தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதிப் படுத்தியிருக்கிறது. உதயகுமாரின்  மீதும், பிற அணு உலை போராளிகள்  பலர் மீதும் இதே பிரிவில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசத் துரோக வழக்கு (குற்றப் பிரிவு 124A) இரண்டு முறை தொடுக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அறவழியில், மென்முறையில் போராடுகின்ற  மக்கள் சுமார் 1,42,561 பேர் மீது ஏறக்குறைய 271 பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இதுவரை. யூன் 16, 2012க்கு பிறகு போடப்பட்ட வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை இன்னும் பெறவில்லை. அவற்றையும் பெறும்போது, மேற்கண்ட எண்ணிக்கைகள் இன்னும் அதிகமாகும். 

மக்களின் உயிரை  குடித்த பயங்கரவாதிக்கும், மக்களின் உயிர் காக்கும் போராளிகளுக்கும் இந்தியாவில் ஒரே தண்டனை தான் என்று நினைக்கும் போது  இந்தியாவில் குடியரசு என்று ஒன்று இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது! இவர்கள் இருவர் மீதும் அதே குற்றப் பிரிவின் கீழ் தான் வழக்கு பதிவு செய்துள்ளது அரசு. ஆனால் மக்களுக்காக போராடிய உதயகுமாருக்கும் தூக்கு தண்டனை தான் என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்குமா அல்லது அவரை விடுவிக்குமா  என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  
  
வாழ்க குடியரசு! வளர்க சனநாயகம்!!

[vuukle-powerbar-top]

Recent Post