Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வாள்வெட்டு தமிழர்களிடமிருந்து யாழ் திருநெல்வேலிப் பகுதியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த பொலிசார் !


கடந்த 9ம் திகதி அன்று, யாழ் திருநெல்வேலியில் உள்ள சிவன் அம்மன் கோவிலடிப் பகுதியை, சில தமிழர்கள் தமது கட்டுப்பாட்டின் கீள் கொண்டுவந்துள்ளனர். என்ன அதிசயம் புலிகளைப் போல இவர்களும் தமிழர் தாயகப் பகுதிகளை விடுவிக்க முயற்சி செய்தார்களா ? இல்லை சிங்களப் பொலிசார் அவ்விடத்துக்கு வரவிடாமல் தடுத்து, ஏரியாவை தமது கட்டுப்பாட்டின் கீள் கொண்டுவந்தார்களா என்று எல்லாம் நீங்கள் கனவு காணவேண்டாம் மக்களே ! இது வேறமாதிரி ஸ்டோரி !

கடந்த 9ம் திகதி மாலை, யாழ். திருநெல்வேலி சிவன் – அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில், இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சினிமாப் பாணியில் வாள்களுடன் வீதிக்கு வந்த இளைஞர்கள் பரஸ்பரம் வாளால் வெட்டுப்பட்டுள்ளனர். இதில் யாழ். திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்த பிரபு (வயது25) என்று அழைக்கப்படும் 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தைச் சேர்ந்த தம்பா மற்றும் நல்லூரைச் சேர்ந்த றூபன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரை சிலர் துரத்தி வந்தாகவும் பின்னர் அந்த இடத்தில் வைத்து வெட்டி வீழ்த்தி விட்டு தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் தமக்குள் மோதிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இந்தச் சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நல்லூர் அரசடி பகுதியில் நுழைந்த இளைஞர்கள் சிலரை வெட்டியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், இறந்த நபரின் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலர் வாளுடன் புறப்பட்டு வந்து, அப்பகுதியை முற்றுகையிட்டனர். வெளியாட்கள் எவரும் உட்புகாவண்ணம் அப்பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதனை அடுத்து பெருந்தொகையான பொலிசார் அவ்விடத்துக்கு குவிக்கப்பட்டனர்.

தற்போது அப்பகுதி எமது பூரண கட்டுப்பாட்டில் உள்ளது என்று இலங்கைப் பொலிசார் ஊடக அறிக்கை விடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்திருக்கிறது. அவ்விடத்தை தாம் மீண்டும் கைப்பற்றிவிட்டோம் என்று பொலிசார் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடையம். சமீப காலமாக யாழில் வாள்வெட்டு, கத்திக் குத்து, அடாவடிகள் அதிகரித்துள்ளது. கேட்டால் அரசியல் இது எல்லாம் சகஜமப்பா என்கிறார்கள் போங்கள் !

[vuukle-powerbar-top]

Recent Post