Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் எரிவாயு கலன் வெடித்ததில் மூவர் பலி


சென்னையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சமையல் செய்யும் எரிவாயு வெடித்ததில் மூதாட்டி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

சென்னை திருமங்கலத்தை அடுத்த பாடிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு கலனை சரிபாக்கும் போது தீடிரென வெடித்துச் சிதறியது.இதில் கலனை சரிபார்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியும் அவரின் இரு மகன்களும் உயிரிழந்தனர்.மேலும் வீட்டில் இருந்த ஒரு குழந்தை உட்பட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீ பரவாமல் கட்டுபடுத்தியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post