Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கோடியக்கரை அருகே சிங்கள கடற்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது அங்கு ரோந்து வந்த சிங்கள கடற்படையினர் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.மேலும் மீனவர்களின் படகில் மோதி படகையும் சேதப்பட்டுத்தியுள்ளனர்.

மீனவர்கள் மீது இரும்புக்கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளதாகவும், வலைகளை அறுத்ததாகவும் அறியப்படுகிறது.இந்த தாக்குதலில் 8 மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இத்தாக்குதலினால் அச்சமடைந்த மீனவர்கள் பாதியிலேயே கரைக்கு வந்துவிட்டனர்.காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது,சிங்களக் கடற்படையின் இந்தத் தாக்குதல் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.இதனால் எங்கள் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.இது குறித்து மத்திய அரசு தொடர் மவுனம் சாதித்து வருகிறது.தொடர்ந்து மத்திய அரசு தமிழக மீனவர்களை புறக்கணிக்கிறது என்றும் இலங்கைக்கு ஆதரவாக பேசிவருவது எங்களுக்கு மனவேதனையாக இருக்கிற்து என்றும் கூறியுள்ளனர்

சிங்களக் கடற்படையின் இந்தத் தொடர் தாக்குதலினால் தமிழக மீனவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி - பிரசாந்த் தமிழ்
[vuukle-powerbar-top]

Recent Post