Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சொந்த அனுபவத்தை நூல் வடிவில் வெளிப்படுத்தியிருக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்த்


தமிழ் மற்றும் கன்னட சினிமா துறையில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.தற்போது எழுத்தாளராக புது அவதாரம் எடுத்திருக்கும் அவர், தன்னுடைய சொந்த அனுபவங்களை நூல் வடிவத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இட்ஸ் நோ பன் விதௌட் யு என்ற தலைப்பில் வெளியாகியுள்ள மேற்படி நூலில், சினிமா துறையில் அவருக்கு உண்டான அனுபவங்களையும், மற்றும் அவரது பயண அனுபவங்களையும் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.

சில காலமாக சமூக வலைத்தளத்தில் தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்தே, இதை புத்தக வடிவில் வெளியிட தான் எத்தனித்ததாக கூறியிருந்தார் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

70 பக்கங்களை கொண்ட அந்நூலில் அவரது சொந்த அனுபவங்கள் மட்டுமல்லாது,ஒரு சில தத்துவ வாசகங்களையும், அதற்கு அவரது சொந்த விளக்கங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்.

.
[vuukle-powerbar-top]

Recent Post