Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கும் இசைஞானி.


இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் ஜீவா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடித்துள்ள நீதானே பொன் வசந்தம் படத்தின்  பாடல்கள் அண்மையில் வெளியாகியிருந்தது.

இப்படத்திற்கான இசையை இசைஞானி இளையராஜா அவர்கள் அமைத்திருந்தார்கள்.இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் எல்லாத் தரப்பு மக்களிடையேயும் மிக பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறன.இவ்வாறு இப்படத்தின் பாடல்களுக்கு  மக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து இயக்குனர் அமீரின் புதிய படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு இசைஞானி அவர்களுக்கு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அமீர் இயக்கப்போகும் புதிய படம் கண்ணபிரான்.இப்படத்திற்கான இசை அமைக்கும் பணியே இசைஞானிக்கு கிடைத்துள்ளது.ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த படங்களான காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ்  மற்றும் கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களுக்கு இசைஞானி அவர்கள் மெட்டு கோர்த்திருந்தார்.இப்படங்கள் இசை ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றிருந்தன.அந்த வகையில் அமீர் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் கண்ணபிரான் படமும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


[vuukle-powerbar-top]

Recent Post