Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெளிநாடு செல்ல முயற்சித்த முன்னாள் பெண் புலிப் போராளி ஒருவர் கைது

வெளிநாடு செல்ல முற்பட்ட முன்னாள் பெண் புலிப் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட மா அதிபராகக் கருதப்பட்ட லங்கேஸ்வரன் கைலாபதி என்பவரின் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லதாமுனி லங்கேஸ்வரன் என்ற பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குறித்த பெண் வெளிநாடு செல்ல முற்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்ணுக்கு உதவி செய்த கொழும்பைச் சேர்ந்த தமிழர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா சென்று அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்ல குறித்த பெண் முயற்சித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
லதாமுனி லங்கேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி பெண் பிரிவின் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post