Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பட்டாசு ஆலை உரிமையாளருக்கு வலை வீசியுள்ள காவல்துறை

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 12 பேர் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள ஆலை அதிபர் முருகேசனை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை விபத்து தொடர்பான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இதன்படி, பட்டாசு ஆலைக்கான உரிமம் ஏற்கனவே ரத்தாகிவிட்டது. எனினும், இந்த ஆலையை அதன் உரிமையாளர் முருகேசன் தொடர்ந்து நடத்தியுள்ளார்.

இதில், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதவிர, அந்த ஆலையில் 40 வகையான விதிமுறை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.

பட்டாசு தயாரிப்பில் சுத்தியல் போன்ற விபத்தை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியது, அளவுக்கு அதிகமான வெடி பொருட்களை சேமித்து வைத்திருந்தது போன்றவையே விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post