Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரதமர் மன்மோகன் சிங் குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் விமர்சனம்

பிரதமர் மன்மோகன் சிங் குறித்து சில நாட்களுக்கு முன் செயல்படாத பிரதமர் என்று டைம் இதழ் குறிப்பிட்டது இதனால் எழுந்த சர்ச்சைகள் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், இன்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் என்ற தினசரி பத்திரிகையில், நாட்டை நவீனமயமான, வளமான பாதையில் வழிநடத்திச் செல்ல உதவிய பிரதமர் மன்மோகன் சிங், ஊழல் அமைச்சரவையை வழிநடத்திச் செல்வதால் அமைதியாகக் காட்சியளித்த அவரது முகம் கவலை தோய்ந்ததாகக் காட்சியளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி கட்டுரையில் விமர்சித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. உலக அளவில் மதிக்கப்படும் தலைவராகவும், அறிவார்ந்த பொருளாதார வல்லுநராகவும் இருக்கும் மன்மோகன் சிங், மிக மோசமான ஊழல் அரசை வழிநடத்துகிறார் என்றும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்டின் இந்தக் கட்டுரைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post