Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"துப்பாக்கி" படத்தில் இராணுவ அதிகாரியாக நடிக்கும் விஜய்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "துப்பாக்கி" படத்தின் பெயர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில்,தொடர்ந்து  அதைப் பற்றிய செய்திகளை தவிர்த்து,"துப்பாக்கி" படத்தில் விஜயின் கதாபாத்திரம் எத்தகையது என்ற போக்குக்கு மாற தீர்மானித்தோம்,

 அந்த வகையில்,படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல், "துப்பாக்கி" படத்தில் விஜய் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கக்கூடும் என பலராலும் கூறப்பட்டது.ஆயினும் இப்படத்தில் இராணுவ அதிகாரி வேடம் ஏற்றிருக்கும் விஜய்,தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தனது ஊரான மும்பைக்கு திரும்பியதும்,அங்கு நடக்கும் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை கண்டு, எப்படியாவது மக்களுக்கு எதிராக செயல்படும் அந்த சக்திகளை வேரோடு வேட்டையாட வேண்டும் என  நினைத்து  ,அதில் வெற்றியும் காண்கிறார்.

இதற்கிடையே, "துப்பாக்கி" படத்தின் இந்தி மொழியாக்கப் படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அக்ஷே குமார் இந்த கதாபாத்திரத்திற்கு  பொருத்தமானவர் எனவும் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post