Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இன்றைய முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

முக்கிய சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களும் இயங்கவில்லை. 

எனினும், புதுச்சேரி மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 

புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று அரசு பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post