Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எங்கள் போராட்டம் என்றும் ஓயாது ~ எழுச்சிக்குரலில் உதயகுமார்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் மக்கள் இன்று மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடிந்தகரை சென்றுள்ளார். 

இடிந்தகரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கூடங்குள அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார், மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். 

கூடங்குளத்தில் அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் மக்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஒரு முறை கூட சந்திக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் போராடுவோம் என்றும் எந்த சூழ்நிலையிலும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்றும் தெரிவித்தார். 

இருப்பினும் மத்திய அரசு தங்களை மனிதர்களாக பார்க்காமல், தொடர்ந்து கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்குவதிலேயே கவனமாக இருப்பதாக தெரிவித்தார். கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில், தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் கருணாநிதி அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்றார். 

அவரது அரசியல் சாணிக்கியம் உழைக்கும் மக்களான தங்களிடம் செல்லாது என்றார். அதே போல், தமிழக முதல்வரும் தங்களை புறந்தள்ளி விட்டு தேர்தலில் 40 தொகுதிகளில் 4 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது என்றார். 

இதே நிலைப்பாட்டை கூடங்குள மக்கள் மீது ஜெயலலிதா தொடர்வார் ஆனால், அவரும் அரசியலை விட்டு விலகுவது நல்லது என்றார். கூடங்குளம் தடியடி சம்பவைத்திற்குப் பிறகு முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்ட தலைவர்களுக்காக உயிரையும் கொடுப்போம் என்றும் அப்படிப்பட்ட தலைவர்கள் தங்கள் பின்னணியில் இருப்பதாகவும் சுப உதயகுமார் கூறினார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post