Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இஸ்லாமியர்களை இழிவு படுத்திய அமெரிக்காவை கண்டித்து திருமா தலைமையில் ஆர்பாட்டம்



சென்னை : இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. 

 நபிகள் நாயகத்தையும் இசுலாமியர்களையும் இழிவுபடுத்தும் குறும்படத்தை வெளியிட்டுள்ள அமெரிக்காவைக் கண்டித்தும், அப்படத்தை உலகம் முழுக்கத் தடை செய்யக் கோரியும் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

முற்றுகைப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இன்று (17-9-2012) காலை 10 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்தும், ஒபாமாவை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். தடா ரகீம் தலைமையில் இந்திய தேசிய லீக் கட்சியினரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் சாலையை மறித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 'அமெரிக்க அரசே அமெரிக்க அரசே தடை செய் தடை செய் முகமது நபியை இழிவுபடுத்தும் திரைப்படத்தை தடை செய்', 'இழிவுபடுத்தாதே இழிவுபடுத்தாதே முகமது நபியை இழிவுபடுத்தாதே', 'மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் ஒபாமாவே மன்னிப்புக் கேள்', 'அச்சுறுத்தாதே அச்சுறுத்தாதே இசுலாமியர்களை அச்சுறுத்தாதே', 'மிரட்டாதே மிரட்டாதே இசுலாமிய நாடுகளை மிரட்டாதே' ஆகிய முழக்கங்களை தொல்.திருமாவளவன் எழுப்ப தொடர்ந்து சிறுத்தைகளும் முழங்கினர். 

நிறைவாக தொல்.திருமாவளவன் பேசும்போது, "முகமது நபியை இழிவுபடுத்தும் குறும்படத்தை உலகம் முழுவதும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும். யூ டியூப் போன்ற இணைய தளங்களிலும் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும். தொடர்ந்து இசுலாமியர்களை இழிவுபடுத்தும் போக்கு தொடருகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது'' என்று குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் வன்னிஅரசு, எழில்கரோலின், பாவலன், இளஞ்சேகுவேரா, கௌதமசன்னா, பார்வேந்தன், எஸ்.எஸ். பாலாஜி, ஷா நவாஸ், அப்துர்ரகுமான், சிபிசந்தர், மோ.எல்லாளன், வெ.கடம்பன், ஆ.விடுதலைச்செல்வன், சேத்துப்பட்டு இளங்கோ உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



[vuukle-powerbar-top]

Recent Post