Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினை இலங்கை படையினர் அடக்கினர்

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபரை இடமாற்றியதை எதிர்த்து இன்று மாணவர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்தினை பாடசாலை நிர்வாகத்தினர் இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையினர், புலனாய்வாளர்களைக் கொண்டு அடக்கியுள்ளது.

பாடசாலை வளாகத்திற்குள்ளும் வெளியிலும் பெருமளவு இலங்கை இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் பாடசாலை வளாகத்திற்குள் காவல்துறையினரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
பாடசாலை வாளகத்தினை விட்டு வெளியேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தாயாரகிக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் ஊடுருவிய இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் இவர்களிடம் விசாரணைகளை முற்கொண்டுள்ளனர்.

குறித்த புலனாய்வாளர்களை கூட்டிச் சென்ற யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பகீரதன் என்னும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் மேற்படி புலனாய்வாளர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.


இதனால் மாணவர்களிடம் சகஜமா உரையாடிய புலனாய்வாளர்கள் எதிர்ப்புப் போரட்டத்திற்கு முன்னிற்கும் மாணவர்களுடைய விபரங்களை பெற்றுக் கொண்டதுடன் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினையும் பெற்றுள்ளனர்.

இதன் பின்னர் தாம் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் தமது அடையாள அட்டையினையும் காண்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்படி விபரங்கள் பெறப்பட்ட மாணவர்களை உடுவில் இராணுவ முகாமிற்கு 3 மணியளவில் விசாரணைக்காக வரவேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் முன்னனிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுடைய கல்வி செயற்பாடுகளை திட்மிட்டு முடக்கும் செயற்பாடகவே இதுவும் இடம்பெற்றுள்ளது. யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் மாற்றத்தின் பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அடிவருடிக் கட்சியான ஈ.பி.டி.பி அட்சித் தொண்டர்கள் இருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post