Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திரிமுணால் காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் இன்று பதவி விலகின்றனர்

அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவது தொடர்பான கடிதத்தை, அந்த கட்சி குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியிடம் அளிக்கவுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 19 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, வெளியேறுவதன் மூலம், மக்களவையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 254 ஆக குறைகிறது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்யவுள்ளனர். 

திட்டமிட்டபடி 6 அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக மத்திய அமைச்சர் முகுல் ராய் தெரிவித்துள்ளார். 

டெல்லி புறப்படும் முன் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post