Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த 5 பெண்கள் உள்பட 23 பேருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரும் 50 சதவீதத்துக்கும் குறைவான தீக்காயம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வெடி விபத்தில் பலியானவர்களில் 20 பேரின் உடல்கள் சிவகாசி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சாத்தூர், விருதுநகர் போன்ற நகரங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post