Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் சிங்களவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் - முதலமைச்சர் ஜெயலலிதா


தமிழகத்திற்கு சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணமாக வரும் சிங்களவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா இதனை தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு உரிய நியாயம் கிடைக்காததால் தான் இலங்கை கால்பந்து வீரர்களை திருப்பி அனுப்பியதா கூறினார்.மத்திய அரசு ஈழத்தமிழர்கள் விடயத்தில் மிகவும் மெத்தன போக்காக செயல்படுகிறது எனவும் ஈழத்தமிழர்களுக்கு குற்றம் இழைத்தவர் கருணாநிதி எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் முருகன் கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post