Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிரனைட் முறைகேடு : மதுரை அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை

கிரனைட் குவாரி முறைகேடு தொடர்பாக, மதுரையில் அரசு அதிகாரிகள் 8 பேர் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

இது குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறு போலீ்ஸ் தனிப்படையைச் சேர்ந்தவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சோதனைக்கு ஆளாகியுள்ள அரசு அதிகாரிகள் 8 பேரும் வருவாய்த்துறையைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post