Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாஜகவே பொறுப்பு : ஜி.கே.வாசன்

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு பாஜகவினரே பொறுப்பேற்க வேண்டுமென மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

 சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம் 12 நாட்களாக முடங்கியதற்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்ததற்கும் பாஜகவினரே பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்தார். 

 மேலும் ஆன்மீகம் மற்றும் விளையாட்டு தொடர்பாக இந்தியாவிற்கு வரும் இலங்கை நாட்டவர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர் இந்த சம்பவங்கள் இலங்கையில் வாழும் தமிழர்களையே பாதிக்கும் எனக்கூறினார். மேலும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நிறுத்த பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியிடமும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post