Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

த.தே.பொ.கட்சியின் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்ட தொகுப்பு (படங்கள்)


தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியினர் தமிழகம் முழுவதுமாக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியிள்ளனர் அது பற்றிய முழு தொகுப்பு,

கூடங்குளம் மக்கள் மீதான கண்மூடித்தனமான அடக்குமுறைகளை நிறுத்து!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!
தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் பரவும் போராட்டங்களின் தொகுப்பு!

கூடங்குளம் மக்கள் மீதான கண்மூடித்தனமான அடக்குமுறைகளை நிறுத்து!” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார். 

இடிந்தகரை மக்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டி தாக்குதலைக் கண்டித்துதும்தமிழக அரசு உடனடியாக காவல்துறையை திரும்பபெற வலியுறுத்தியும் சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.  ஆர்ப்பாட்டத்திற்குத.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் ம.கோ.தேவராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசியத.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், “கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாக அறவழியில் அமைதியாகப் போராட்டங்கள் நடந்து வந்தன. அணுஉலை எதிர்ப்பாளர்கள் முன்வைத் 52 கேள்விகளுக்கு இப்போது கூடஅரசிடமிருந்து முறையான பதில்கள் இல்லை. பொய்யான விளக்கம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் அணுஉலை வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தான்,அணுஉலையில் எரிபொருள் நிரப்ப முயன்ற அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இடிந்தகரை மக்கள் அமைதிவழியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரையில் அமைதியாக அமர்ந்திருந்த மக்கள் எந்தவொரு ஆத்திரமூட்டல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. முல்லைப் பெரியாறு அணை மீட்புக்காக தேனியில் திரண்ட தமிழ் மக்கள் மீது தடியடி நடத்திய மலையாளக் காவல்துறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தான்தமிழக அரசின் உத்தரவின் பேரில் மக்கள் மீது வன்முறையைக் கட்டவழித்துள்ளார். ரவுடிகளைப் போல நடந்து கொண்ட காவல்துறையினர்,தண்ணீரில் தத்தளித்த மக்கள் மீது சிறிதும் இரக்கமின்றி கற்களை வீசித் தாக்கியுள்ளனர். ஒரு பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். உலகம் முழுவதும் அணுஉலைகளுக்கு எதிராக மக்கள் போராடுகின்ற சூழலில்அணுஉலையை எதிர்க்கும் மக்கள் மீது போர் தொடுக்கும் அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். கூடங்குளம் மக்கள் மீதான கண்மூடித்தனமான,காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை உடனே நிறுத்த வேண்டும். அணுஉலையில் எரிபொருள் நிறுத்துவதை தடை செய்துபோராட்டக் குழுவினருடன் உரிய முறையில் அரசுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில்திரளான உணர்வாளர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
இடிந்தகரையில் மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியக் காவல்துறையினரைக் கண்டித்து தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தூத்துக்குடி
தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்தை நூற்றுக்கணக்கான மீனவர்கள் மறித்தனர்.  அப்போது காவல்துறையினர் நடத்தியக் கொடூரத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். மைசூர் விரைவுத் தொடர்வண்டி பல மணிநேரம் சிறைபிடிக்கப்பட்டது.

நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இடிந்தகரை மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை அறிந்து, சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் உடனடியாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாகப் பேசச் சென்ற மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழா திருமுருகன் காந்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மாலை வரை சைதைப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரை மாலை விடுவித்தனர்.

சென்னை நினைவரங்கம் அருகில் 150 பேர் கைது
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், சென்னை மெமோரியல் ஹால் முன்பு மாலை 5 மணியளவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் திரு. கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது அன்சாரிஎஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் அமீர் ஹம்சாதென் சென்னை மாவட்டத் தலைவர் முஹம்மது உசேன்திருவள்ளூர் மாவட்டத் தலைவர் புஹாரி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

பாரிமுனையில் மறியலில் ஈடுபட்ட 178 பேர் கைது
சென்னை பாரிமுனை கடற்கரைச் சாலைஇந்தியன் வங்கி அருகில் அருகில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேர் கைதாயினர். அனைவர் மீதும், இந்தியத் தண்டனைச் சட்டம் 188 மற்றும் 143 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இரவு மணியளவில் சொந்த பிணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கிண்டியில் 30 பேர் கைது
சென்னை கிண்டி தொடர்வண்டி நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய, காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சித் தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஓசூரில் 29 தோழர்கள் கைது
ஓசூர் தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையிலான 28 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 

குடந்தை 12 தோழர்கள் கைது
குடந்தை நகரம் சுவாமிமலை கடைவீதியில் மறியலில் ஈடுபட்ட, தமிழ்த் தேசப பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர்தமிழக இளைஞர் முன்னணி சுவாமிமலை கிளைச் செயலாளர் தோழர் முரளி உள்ளிட்ட 10 தோழர்கள் கைது செய்யப்பட்டு தற்போது காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி மற்றும் தமிழக முதல்வர் செயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

காந்திபுரம் - அனைத்துக் கட்சி சார்பில் மறியல் - 41 தோழர்கள் கைது!
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, தந்தை பெரியார்  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சுசி.கலையரசன்தோழர் பொன் சந்திரன்(மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகம்)தோழர் குப்புராஜ்(ஆதித்தமிழர் பேரவை) ஆகிய பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்கோவை வடக்குக் கிளைச் செயலாளர் தோழர் பா.சங்கர்தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர்கள் தோழர் இராசேசுக்குமார்தோழர் ம.தளவாய்சாமிதோழர் பிறை.சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 41 தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

நாளை தமிழகமெங்கும் சாலை மறியல்
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது கொடுந்தாக்குதலை ஏவிஒரு குழந்தை உள்ளிட்ட பலரையும் பலிவாங்கிய காவல்துறையைக் கண்டித்தும்,கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பக் கூடாதென வலியுறுத்தியும் நாளை தமிழகமெங்கும் சாலை மறியல் நடத்த அணுஉலைக்கு எதிரான அனைத்துக் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இடிந்தகரை மக்கள் மீதானத் தாக்குதலைத் தொடர்ந்துஇன்று மதியம் மணிளவில் சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் அணுஉலைக்கு எதிரான அனைத்துக் கட்சியினரின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. 

இதில்ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் தா.செ.கொளத்தூர் மணிதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்,தமிழ்நாடு மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அதியமான், தோழா மகேசு(காஞ்சி மக்கள் மன்றம்), தோழர் செந்தில்(சேவ் தமிழ்ஸ் இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்இடிந்தகரை நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கைதிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில்சென்னையில்நாளை காலை மணியளவில் அண்ணா சிலை முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்றும்தமிழக மாவட்டத் தலைநகரங்களில் இதே போன்று மறியல் நடத்துவது என்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
நாளை காலை சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்திலும்அந்தந்த மாவட்டங்களில் நடைபெறுகின்ற போராட்டங்களிலும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும்தமிழ் உணர்வாளர்களும்மனித நேய சக்திகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, 17 அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் நாளை தமிழகமெங்கும் பா.ம.க. சார்பில் மறியல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இராமேசுவரத்தில் நாளை மீனவர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டம் மணவாடு கிராமத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில், அந்தோணிசாமி என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து நாளை இராமேசுவரம் முழுவதும் மீனவர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகின்றது.

கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்குத் துணை நிற்போம்! காவல்துறை வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! கரம் கோப்போம்![vuukle-powerbar-top]

Recent Post